ஆர்ப்பாட்டத்தின் போது, தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை…

(FASTNEWS| COLOMBO)- பத்தரமுல்ல கல்வி அமைச்சிற்கு முன்பாக கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு, இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளது.

இது குறித்து எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு அறிவிக்கவுள்ளதாக சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசிரியர், அதிபர்களுக்கான சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் ஒன்றிணைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.