நியமனம் பெற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
சுமார் ஆயிரம் பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பி வருவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
தற்போது அரச தொழிலிலுள்ள பட்டதாரிகளுக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும் எனவும், அவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் வரவு செலவுத்திட்டத்தில் தடை செய்யப்பட்ட மற்றும் மோட்டார் வாகன சலுகை ஆகியவற்றை மீண்டும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும், குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை சென்றுள்ளதுடன், அவர்களில் சுமார் 10 பேர் வரை ஜனாதிபதி செயலகத்திற்குள் அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.