(FASTNEWS |COLOMBO)- கண்டி டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி வளாகத்திற்கு சொந்தமான பகுதியை வலயக் கல்வி பணிமனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டி குறித்த பாடசாலையின் பழைய மாணவர்களும், பெற்றோர் சிலரும் குறித்த கல்லூரிக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக கண்டி நகரில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.