பெறுமதிசேர் ‘வற்’ வரி அதிகரிப்புக்கு எதிராக, கொழும்பு – புறக்கோட்டை வியாபாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (15) காலை முதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனால், புறக்கோட்டை மற்றும் கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் தற்போது, வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.