ஆர்.பிரேமதாச மைதான ஒய்வறை கண்ணாடி சேதம் – CCTV காட்சிகளில் பதிவாகிய விதம்…

ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, ஒய்வறையின் கண்ணாடியை சேதப்படுத்திய விதம் தொடர்பில் CCTV காட்சிகளில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கையில்;

பங்களாதேஷ் வீரர் ஷாகிப் அல் ஹசன் வேகமாக ஓய்வறையின் கதவினைத் திறக்க அது சுவரில் மோதியதிலேயே கண்ணாடி உடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. CCTV காணொளிப் பதிவுகளுக்கு அமைய, நடுவரின் தீர்மானத்திற்கு கவலை தெரிவித்து ஓய்வறைக்கு சென்ற ஷாகிப் அல் ஹசன், துடுப்பெடுத்தாடும் வீரர் விளாசிய 06 ஓட்டங்களுக்கு களிப்பின் ஆவேசத்தில் ஓய்வறையினை விட்டு கதவினை வேகமாகத் திறந்த வண்ணம் மைதானத்தினை நோக்கி சென்றுள்ளார். அச்சந்தர்ப்பத்திலேயே கதவு சுவரில் பலமாக அடிபட கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியுள்ளதாக அதில் பதிவாகியுள்ளது.

 

-Riz