ஆறு இலட்சம் குடும்பங்களுக்கு புதிதாக சமுர்த்தி வழங்கும் நிகழ்வு

(FASTNEWS|COLOMBO) ஆறு லட்சம் குடும்பங்களுக்கு புதிதாக சமூர்த்தி வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 15ஆம் திகதி வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

அமைச்சர் தயாகமகேயும் இந்நிகழ்வில் கலந்துக் கொள்ளவுள்ளதுடன், இதன் ஆரம்ப நிகழ்வு பிரதமர் தலைமையில் இம்மாதம் 30ஆம் திகதி அம்பாறையில் இடம்பெறவுள்ளது.

31ஆம் திகதி நடைபெறும் நிகழ்வு பொலன்னறுவையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.

இம்முறை வரவுசெலவுத் திட்ட யோசனைக்கு அமைய முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் புதிதாக ஆறு லட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தியை வழங்குவதற்காக அரசாங்கம் ஆயிரம் மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.