நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இங்குரு ஒயா மாப்பாகந்த பகுதியில் உள்ள ஆற்றில் நீராடசென்ற இரண்டு பேர் இன்று (22) நீரில் அடித்துச் சென்று உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் விஜிராபுர பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 வயதுடைய அப்துள் ரஹ்மான் மற்றும் 42 வயதுடைய மொகமட் முஸ்தாக் என்போரே இவ்வாறுஉயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.