(FASTNEWS|COLOMBO) – சீனாவில் டீய்பான் என்கிற ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
29 பயணிகளுடன் சென்ற படகு திடீரென யாரும் எதிர்பாராத வகையில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதில் படகில் இருந்த அனைவரும் ஆற்றில் மூழ்கினர். இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 8 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த 11 பேரை மீட்டு அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருவதுடன், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.