யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் கொக்குவில் மேற்குப் பகுதியில் இன்று(15) காலை ரவீந்திர தரூஷன் எனப்படும் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆவா குழு உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர் தற்போது யாழ்.பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
(rizmira)