ஆவா குழு – சந்தேகத்தில் மேலும் மூவர் கைது..

ஆவா குழுவின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் மேலும் மூன்று பேர், சுன்னாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நேற்று(09) முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஆவா குழுவின் இரண்டாம் நிலைத் தலைவர் என்று கூறப்படும் நபர் உள்ளிட்ட 6 பேர், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் 7ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த நிலையில்
இவர்களை, யாழ். நீதவான் நீதிமன்றத்தில் நேற்று(09) முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன் அவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி அடையாள அணிவகுப்பில் ஈடுபடுத்தவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

(rizmira)