(ஃபாஸ்ட் நியூஸ் | அவுஸ்திரேலியா) – அவுஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் விக்டோரியா கடற்கரையில் தஞ்சம் அடைந்து வருகின்றதாக அந்நாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
காட்டுத் தீயை அணைக்க நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களின் கடற்கரையோரப் பகுதிகளுக்கு இராணுவ விமானங்கள் மற்றும் கப்பல்கள் அனுப்பி வைக்கப்படும் என அந்நாட்டின் அரசு தெரிவித்துள்ளது.