20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. ஒவ்வொரு உலக கோப்பையிலும் குறைந்தது 2 ஆசிய அணியாவது அரைஇறுதிக்கு வந்து விடும். ஆனால் இந்த முறை தான் ஆசிய அணிகளின் ஆதிக்கம் வெகுவாக தளர்ந்து போய் இருக்கிறது. அதுவும் இந்த உலக கோப்பை ஆசிய கண்டத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நடப்பு உலக கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 ஆசிய அணிகள் களம் கண்டன. இதில் இந்தியா மட்டுமே அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளது.
அரையிறுதிக்கு யார் தகுதி பெறுவது என்பதை தீர்மானிக்கும் முக்கிய போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் நேற்று மோதின.குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 160 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியினர் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்திய அணி அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் எதிர்வரும் 31ம் திகதி மோதுகின்றது.