ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வாட்சப் குழுவிலிருந்து டேவிட் வார்னர் விலகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தென்னாபிரிக்காவுக்கு எதிராக 04 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.
இந்நிலையில், 03-ஆவது டெஸ்ட் ஆட்டம் கடந்த 22 ஆம் திகதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் பேன் கிராஃப்ட் பந்தை சேதப்படுத்த முயன்றது வீடியோவில் பதிவாகியது.
இது ஆஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்மித் உதவியுடன் செய்யப்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ஸ்மித்தும், பேன் கிராஃப்டும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
அத்துடன், அணியின் தலைமை பொறுப்பிலிருந்து ஸ்மித்தும், உப தலைவர் பொறுப்பிலிருந்து டேவிட் வார்னரும் விலகிக் கொள்வதாக அறிவித்தனர்.
இணைப்புச் செய்தி..