ஆஸி மக்களை சுழற்றி எடுக்கும் ‘டெபி’ சூறாவளி….

அவுஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்தில், ஏற்கனவே எதிர்வு கூறப்பட்டபடி ‘டெபி’ சூறாவளி தாக்கத் தொடங்கியுள்ளது. மணிக்கு சுமார் 260Km வேகத்தில் வீசி வரும் சுழல் காற்றால் வீடுகள் சின்னாபின்னமாகி வருகின்றன. கடல் அலைகளும் அச்சுறுத்தும் நிலையில் வீசி வருகின்றன

நான்காம் நிலைச் சூறாவளி எனக் குறிப்பிடப்பட்ட டெபி, சிறிது நேரத்தில் அதியுச்ச ஆபத்து நிலையான ஐந்தாம் நிலைக்கு மாறுமோ என்ற அச்சமும் தோன்றியிருந்தது. எனினும், சிறிது நேரத்துக்கு முன் அதன் வேகம் சற்றுக் குறைந்ததால், மூன்றாம் நிலைச் சூறாவளியாக நிலை மாறியிருக்கிறது.

குவீன்ஸ்லாந்தின் வட பகுதி தொலைதூர நகரங்களை டெபி சூறாவளி தாக்கலாம் என்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதையடுத்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்ததால், உயிர்ச் சேதங்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. குவீன்ஸ்லாந்தின் தலைநகரான பிரிஸ்பேனில், சூறாவளியால் சுவர் ஒன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் காயங்களுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மூன்றாம் நிலைச் சூறாவளியாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் டெபி, நாளை காலை குறைவடையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

(rizmira)