ஆஸ்திரேலியாவின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஆலன் பார்டர் விருதை தட்டிச்சென்றார் டேவிட் வார்னர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நேற்று அளித்த பேட்டியில், ‘முதலாவது 20 ஓவர் போட்டியில் நாங்கள் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் வீசிய 8 ஓவர்களில் 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளோம். இந்த பகுதியில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டும்.

மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சை திறம்பட சமாளித்து, பெரிய ஷாட்டுகள் அடித்து விளையாட வேண்டும். இங்குள்ள மிகப்பெரிய மைதானங்களை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்’ என்றார்.

இதற்கிடையே, ஸ்டீவன் சுமித்தை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலியாவின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஆலன் பார்டர் விருதை டேவிட் வார்னர் நேற்று தட்டிச் சென்றார்.