ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக தஞ்சம்புக முயன்ற 157 அகதிகளை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்தனர்.
ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் ஏராளமானவர்கள் சட்டவிரோதமாக அகதிகளாக குடிபெயர்ந்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்கா, ஈரான், ஈராக், போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள், இந்தோனேஷியாவில் இருந்து படகுகள் மூலம் ஆஸ்திரேலிய எல்லைக்குள் நுழைகின்றனர். இதனைத் தடுக்கும் விதமாக ஆஸ்திரேலிய கடற்படை தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக வடமேற்கு கடல்பகுதியில் அந்நாட்டு கடற்படைக்குச் சொந்தமான ரோந்து கப்பல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற படகு தடுத்து நிறுத்தப்பட்டது.
அதில் 157 பேர் பயணம் செய்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் அனைவரும் தஞ்சம் அடைய வந்தவர்கள் என தெரியவந்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற குற்றத்திற்காக அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
(riz)