ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ – 1000 இற்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்..

கடந்த 24 ஆம் திகதி ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தில் உருவான காட்டுத்தீ நிலவி வரும் வறண்ட வானிலை மற்றும் வேகமாக வீசி வரும் காற்று காரணமாக கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

காட்டுத்தீயை அணைக்க நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அங்கு நிலவி வரும் மோசமான வானிலையால் இந்த பணிகள் மிகவும் மந்தமாகவே நடைபெற்று வருவதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் குறித்த அந்த பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். மேலும் காட்டுத்தீ பரவி வரும் பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.