ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவானது இங்கிலாந்து

(FASTNEWS|COLOMBO)- உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நேற்று இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி 08 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் அணி நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 223 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.

அதன்படி இங்கிலாந்து அணிக்கு 224 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது.

பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி 32.1 ஓவரில் 02 விக்கட் இழப்புக்கு 226 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.