ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த டேவிட் சாகர் தனது பதவியை இன்று(07) இராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதை உறுதிப்படுத்திய ஆஸ்திரேலியா கிரிக்கெட், டிராய் கூலே-ஐ பந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது.
சாகர் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகவும், ஆஸ்திரேலியாவின் உள்ளூர் தொடரான விக்டோரியா அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(iFA)