அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் வொட்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்ட நிலையிலேயே அவர் இந்த ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
34 வயதான வொட்சன் இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,731 ஓட்டங்களையும் 75 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2005 ஆம் ஆண்டு கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடிய வொட்சன் ஐந்து ஆ’ஸ் தொடர்களில் பங்கேற்றுள்ளார். அவுஸ்திரேலியா 2-3 என தொடரை இழந்த இம்முறை ஆ’ஸிலும் அவர் பங்கேற்றிருந்தார்.
கடந்த சனிக்கிழமை லோட்ஸில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிராக இரண்டாவது ஒருநாள் போட்டியில் வொட்சன் 64 ஓட்டங்களை பெற்றிருந்தார் சுட்டிக்காட்டத்தக்கது.
(riz)