தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் செஞ்சூரியனில் 22ம் திகதி தொடங்குகிறது. ஏற்கனவே முடிந்துள்ள மூன்று போட்டிகளில் இங்கிலாந்து அணி இரண்டில் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.
முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயினுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டி நடந்துகொண்டிருக்கும்போது வெளியேறினார். அதன்பின் 2வது மற்றும் 3வது போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் அவர் நான்காவது போட்டியிலும் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தென்ஆப்பிரிக்க அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டெயின் இல்லாததால் அந்த அணி இரண்டில் தோல்வியடைந்ததும் குறிப்பிடத்தக்கது. அதேபோன்று தொடக்க வீரர் வான் சைல் தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறார். இதனால் அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஸ்டீபன் குக் ஆடும் லெவனில் இடம்பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.