பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்துள்ள நிலையில் நான்கு ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
அதன்பின் இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 26ம் திகதி தொடங்குகிறது. இதற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உமர் அக்மல் நீக்கப்பட்டுள்ளார். அதே சமயத்தில் 39 வயதான புதுமுக வீரர் ரபதுல்லா மொகமது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தற்போ குவாய்த்-இ-அஸம் டிராபி நடைபெற்று வருகிறது. இதில் ஐதராபாத்- சூய் நார்தெர்ன் கியாஸ் பைப்லைன்ஸ் அணிகள் மோது வருகின்றன. இந்த போட்டியின்போது உமர் அக்மல் அனுமதி இல்லாமல் பார்ட்டியில் கலந்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு தகவல் தெரிந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்:-
அகமது ஷேசாத், மொகமது ஹபீஸ், ரபதுல்லா மொகமது, சோயிப் மாலிக், சோகைப் மசூத், இப்திகார் அகமது, ஷாகித் அப்ரிடி, மொகமது ரிஸ்வான், சர்பிராஸ் அகமது, அன்வர் அலி, இமாத் வாசிம் (பிலால் ஆசிப் உடல்தகுதி பெறாவிட்டால்), இம்ரான் கான், மொகமது இர்பான், தன்வீர் சோஹைல், ரியாஸ் வஹாப், ஆமீர் யாமின்.