அணியின் பிழைத்த இடம் அறியப்பட்டுள்ளதாகவும் அதன்படி, போட்டிக்கான சில திட்டங்கள் குறித்தும், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டிகளுக்கு முன்னதாக இடம்பெற்ற நேற்றைய(03) ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
“சிலவற்றிலிருந்து நாம் பாடம் கற்றுள்ளோம், எமக்கு சருகிய இடங்கள் குறித்து மீட்டிப் பார்க்கும் போது சில இடங்கள் தெளிவாக எமக்கு பாடம் புகட்டிச் சென்றது என்றே கூற வேண்டும், அவை குறித்து நாம் ஆராய்ந்து வருகிறோம், அதற்கமைய எமக்கு போட்டித் திட்டம் ஒன்று உள்ளது. அதன்படி, குறித்த திட்டத்துக்கு அமைய வீரர்களும் இயைபடைந்தார் சிறந்த பலனை அடையலாம்”
இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டியானது எதிர்வரும் 10ம் திகதி தம்புள்ளை தேசிய மைதானத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.