இங்கிலாந்துடன் சமநிலையாக இருக்க இலங்கைக்கு வரம்…

சுற்றுலா தென்னாபிரிக்க அணியுடன் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 2:0 எனற கணக்கில் வெற்றி கொள்ள இலங்கைக்கு வாய்ப்பு கிட்டினால், டெஸ்ட் தரவரிசையின் படி, ஐந்தாவது இடத்தினை தாண்டி இங்கிலாந்துடன் சமநிலைக்கு வர இலங்கைக்கு வாய்ப்பு உள்ளது.

தென்னாபிரிக்கா அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னர் தரவரிசையில் இலங்கையானது 91 புள்ளிகளுடன் 06 வது இடத்தில் இருக்கின்றது. தற்போது 97 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 05வது இடத்தில் உள்ளதோடு, இலங்கைக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தற்போது, தென்னாபிரிக்கா அணியுடனான டெஸ்ட் போட்டியில், முதல் போட்டியில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் இலங்கை அணியானது இருப்பதோடு, இரண்டாவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

R.Rishma