(FASTNEWS | COLOMBO) – உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நேற்று(14) இடம்பெற்ற போட்டியில், இங்கிலாந்து அணி, 08 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 44.4 ஓவர்களில் 212 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
இதையடுத்து, 213 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி, 33.1 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை இழந்திருந்த நிலையில், வெற்றி இலக்கை எட்டியது.


