இங்கிலாந்து அணியில் ஆதில் ராஷித் இணைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு…

இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டிக்கான இங்கிலாந்து குழாமில், சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ராஷித் இணைக்கப்பட்டமை, கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

அணித் தேர்வுக் குழு மேற்கொண்ட மிக மோசமான தீர்மானம் இதுவென இங்கிலாந்தின் முன்னாள் தலைவர்களான மைக்கல் வோகன் மற்றும் நசீர் ஹுசைன் ஆகியோர் இந்த தீர்மானத்தைக் கண்டித்துள்ளனர்.

மேலும் ஆதில் ராஷித் குழாமில் இணைக்கப்பட்டுள்ளதால், இங்கிலாந்து அணி அபாயத்தின் விளிம்பில் தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர்கள் இருவரும் எச்சரித்திருக்கின்றனர்.

ஆதில் ராஷித் 2016ம் ஆண்டு டிசம்பருக்குப் பின்னர் எந்த டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவில்லை. எனினும் ஒருநாள் போட்டிகளில் அவரது அண்மைக்கால பெறுபேறுகளை மாத்திரம் கருத்திற்கொண்டு டெஸ்ட் அணியில் அவர் உள்வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

R.rishma