இங்கிலாந்து அணியுடனான மோதலில் பாகிஸ்தான் தோல்வி

பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதிய 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சார்ஜாவில் நேற்று பகல் – இரவாக நடந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவரில் 208 ஓட்டங்களுடன் சுருண்டது. முகமது ஹபீஸ் அதிகபட்சமாக 45 ஓட்டங்களும், அசார் அலி 36 ஓட்டங்களும் எடுத்தனர். வோக்ஸ் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

பின்னர் விளையாடிய இங்கிலாந்து 41 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 210 ஓட்டங்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெய்லர் 67 ரன்னும், பட்லர் 49 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பாகிஸ்தான் அணி ஏற்கனவே 2–வது போட்டியில் தோற்று இருந்தது. தற்போது மீண்டும் தோல்வியை தழுவியது. இந்த வெற்றி மூலம் 4 போட்டிக்கொண்ட தொடரில் இங்கிலாந்து 2–1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இரு அணிகள் மோதும் 4–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற 20ம் திகதி துபாயில் நடக்கிறது.