இங்கிலாந்து அணி 05 விக்கட்டுக்களை இழந்து 160 ஓட்டங்கள்…

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று(25) இடம்பெறுகின்றது.

போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி 05 விக்கட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடுகின்றது.

முன்னதாக இங்கிலாந்து அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 336 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இதேவேளை, இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் 240 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.