சுற்றுலா இங்கிலாந்து அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய உள்ளூர் உத்தியோகபூர்வ தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையினை MTV தனியார் தொலைக்காட்சி அலைவரிசைக்கு வழங்குவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது.
அவ்வாறே,போட்டிகளை நேரடியாக ஒலிபரப்பு செய்ய உள்ளூர் உத்தியோகபூர்வ வானொலி அலைவரிசையான ITN எப்.எம். இற்கு வழங்குவதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.