(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இங்கிலாந்து கெண்டர்பரி பேராயர் பேரருட்திரு ஜஸ்டின் வெல்பி ஆண்டகை இன்று(29) இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
அங்கிலிக்கன் திருச்சபையின் ஏற்பாட்டில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளும் அவர் நாளை மறுதினம் 31ஆம் திகதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
பயங்கரவாதக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் ஆலயத்துக்கு இன்று(29) விஜயம் மேற்கொண்டு பிரதேச மக்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.