இங்கிலாந்து சுற்றிலிருந்து ஜெப்ரி வெண்டசே விலகல் – இலங்கை அணி பின்னடைவில்..

கைவிரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஜெப்ரே வெண்டசே இங்கிலாந்து தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது.

இதற்காக இலங்கை அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. அப்போது சுழற்பந்துவீச்சாளர் ஜெப்ரே வந்தர்சேவின் கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இது குறித்து தெரிவுக் குழு தலைவர் சனத் ஜெயசூரியா கூறுகையில், அவர் வலைபயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டுக்கும் போது தனது வலது கையின் விரல் ஒன்றை உடைத்துக்கொண்டார்.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக அவர் 2 மாதம் ஓய்வில் இருக்க வேண்டும். திறமையான பந்துவீச்சாளர் விலகி இருப்பது மேத்யூஸ்க்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது என்று கூறியுள்ளார்.

முன்னதாக ஜெப்ரே வெண்டசே, ஹேரத்துடன் இணைந்து மிரட்ட காத்துக்கொண்டிருக்கிறார் என்று சனத் ஜெயசூரியா நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் தொடரில் இருந்து விலகி இருப்பது இலங்கை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.