இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் போட்டிக்கு இலங்கை அணிப்பட்டியளுக்கு புதிதாக 05 வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி செயலாளர் சனத் ஜயசூரியவின் அறிவுரைக்கமைய இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவினால்,
உபுல் தரங்க
பர்வீஸ் மஹ்ரூப்
சீகுகே பிரசன்ன
தனுஷ்க குணதிலக
சுராஜ் ரன்திவ்
மேற்குறிப்பிட்ட வீரர்கள் உடனடியாக இங்கிலாந்து பயணமாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.