பிரபல பாடசாலைகளில் தமது பிள்ளைகளையும் அனுமதிக்குமாறு கோரி, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர்கள் இன்னும் கல்வி அமைச்சின் வளாகத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை கல்வி அமைச்சருடன் கலந்துரையாடல் ஒன்றை கோரி இசுருபாயவிற்கு சென்ற அரச மருத்துவர்கள் இரவு முழுவதும் கல்வி அமைச்சின் வளாகத்தில் இருந்துள்ளனர்.
அரச மருத்துவர்கள் 200 பேர் வரை தற்போது கல்வி அமைச்சின் வளாகத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.