பெலவத்தை, இசுருபாய பிரதேசத்தில் கல்வியமைச்சுக்கு அருகில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட அமைதியற்ற நிலை காரணமாக குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஆசிரியர் சங்கங்கள் சில, பல கோரிக்கைகளை முன்வைத்து, கல்வியமைச்சுக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்ற நிலையில், புத்ததாச விளையாட்டு மைதானதுக்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், கல்வியமைச்சை நோக்கி பேரணியாக வந்தது.
ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணியில் பங்கேற்றிருந்த ஆசிரியர் சங்கங்கள் இரண்டும், ஒன்றுக்கொன்று முரண்பட்ட கோரிக்கைகளை முன்வைத்தமையால், ஆர்ப்பாட்டம் சூடுபிடித்தது. அத்துடன், அவ்விடத்தில் பதற்றமான நிலைமையொன்றும் ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம் காரணமாக, கொட்டாவ, பெலவத்த வீதியில், கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, இசுறுபாயவின் பாதுகாப்புக்காக மேலதிக பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், கலகமடக்கும் பொலிஸாரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.