இசுறு உதானவின் விசேட விக்கெட் தடயத்தினால் Rajshahi Kings அபார வெற்றி…

2019 பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரின் நேற்று(09) எட்டாவது போட்டியில் KHULNA TITAS அணியினை வீழ்த்தி, இலங்கை அணியின் இசுறு உதான பிரதிநிதித்துவப்படுத்தும் RAJSHAHI KINGS அணியானது 07 விக்கெட்களுக்கு வெற்றி பெற்றுள்ளது.

இதன்போது, RAJSHAHI KINGS அணி சார்பில் 04 ஓவர்களை வீசி 15 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்களை இசுறு உதான வீழ்த்தி ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

குறித்த போட்டியின் நாணயற் சுழற்சியில் வென்று முதலில் KHULNA TITAS துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களை பெற்றிருந்தது.

118 இலக்கினை கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய RAJSHAHI KINGS அணியானது 18 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது.