இசை அமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷிற்கு கண்ணீர் அஞ்சலி..

இசை அமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷின் படங்கள் இளைஞர்களை வெகுவாக கவர்கிறது. அதனால் இசை அமைப்பதை வெகுவாக குறைத்துவிட்டு நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதனிடையே ஜி.வி.பிரகாஷூக்கும் அஜித் மற்றும் தனுஷ் ரசிகர்களுக்கு இடையே டுவிட்டரில் யுத்தம் வெடித்தது.

அஜித் ரசிகர்களுடன் வாக்குவாதம் செய்து வந்த ஜி.வி ஒரு கட்டத்தில் பெரும் மன உளைசலுக்கு உள்ளானார்.

தற்போது தல ரசிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து #FrustratedPsychoGvPrakash என்ற ஹேஷ் டேக்கை டிரெண்ட் செய்தனர்.

இதற்கு பின்னர் ஒரு படி மேலே போய் ஜி.வி.பிரகாஷூக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.