இடது பக்கத்தால் முந்திச் சென்று பாதை ஒழுங்குகளை மீறும் வாகனங்களுக்கு விதிக்கப்படவுள்ள 25,000 ரூபா தண்டப்பணச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் கொழும்பில் நிதி அமைச்சருடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இடது பக்கத்தால் முந்திச் செல்லல் உட்பட 7 போக்குவரத்துக் குற்றச்செயல்களுக்கான தண்டப் பணத்தை அதிகரிக்கும் பிரேரணைகள் வரவு செலவுத் திட்ட யோசனையில் அரசாங்கம் முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.