நாட்டில் அநேகமான பகுதிகளில் இன்று(14) மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் பல பாகங்களிலும், இன்று பிற்பகல் 2 மணியின் பின்னர், கடும் மழைபெய்யக்கூடும் என்றும் அந்த நிலையத்தின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, மேல், சப்ரகமுவ ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கு 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என்றும் காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது குறித்த பிரதேசங்களில் தற்காலிக கடும் காற்று வீசக்கூடும் .
#reeshmaa