அரசியல் யாப்பு வழிநடாத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நான்காவது நாளாகவும் இன்று(02) தொடர்கின்றது.
கடந்த 30ம் திகதி குறித்த இந்த விவாதம் ஆரம்பமாகிய போதும் எல்லா உறுப்பினர்களது கருத்துக்களையும் பெறும் நோக்கில் இன்றும் விவாதம் இடம்பெறும் என நேற்று(01) தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்றும் எதிர்வரும் திங்கட்கிழமையும் குறித்த விவாதம் தொடரும் என தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல் யாப்பு வழிநடாத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்திற்காக பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக கூடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.