இடைக்கால வரவு – செலவு திட்டம் இன்று பாராளுமன்றில்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஜனாதிபதியும் நிதியமைச்சருமான  ரணில் விக்கிரமசிங்க இடைக்கால வரவு – செலவு திட்டத்தை  இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

4672 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள இந்த இடைக்கால வரவு – செலவு திட்டத்தை ஜனாதிபதி பிற்பகல் ஒரு மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இதனையடுத்து, பிற்பகல் 2 மணிவரை நிதியமைச்சரின் வரவு – செலவு உரை இடம்பெறவுள்ளது.

அதனையடுத்து, நாளை (31) வரை சபை ஒத்திவைக்கப்படுவதுடன்,  இடைக்கால வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், நாளை முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான வாக்கெடுப்பு எதிர்வரும் 2 ஆம் திகதி பிற்பகல் நடைபெற உள்ளது.