இணங்கியமைக்கு அமைய கட்டணம் உயர்த்தப்படாவிட்டால் 23 நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்…

12.5 சதவீத பேரூந்து கட்டண அதிகரிப்பை பெற்று கொடுக்காத பட்சத்தில் எதிர்வரும் 23ம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து மாகாண தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

குறித்த சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார, கொழும்பில் இன்று(19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செவ்வாய் கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை தீர்மானத்தின் போது, பேரூந்து கட்டண உயர்வுக்கு அனுமதி வழங்கப்படாத விடத்து, நாடு முழுவதும் தமது போராட்டத்தை மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.