சிரியாவில் தனி நபர் இணையதள இணைப்புகளுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் தடை விதித்துள்ளதாக தன்னார்வு அமைப்புகள் தெரிவித்தன.
இதுகுறித்து சிரியா மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பும், ராக்கா நகர தன்னார்வ அமைப்பும் தெரிவித்துள்ளதாவது;
ராக்கா நகரில், வலைதளங்களைப் பார்வையிட விரும்புபவர்கள் பொது இணையதள மையங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஐ.எஸ். பயங்கரவாதிகள் கட்டுப்பாடு விதித்துள்ளனர். ஐ.எஸ். படையினர் உற்பட அனைவருக்கும் வழங்கப்படும் தனியார் இணையதள இணைப்புகளைத் துண்டிக்க, சேவை நிறுவனங்களுக்கு அவர்கள் கெடு விதித்துள்ளனர்.
தன்னார்வ அமைப்புகள் ஐ.எஸ். பயங்கரவாதிகள் குறித்த விவரங்களை இணையதளம் மூலம் வெளியிடுவதைத் தடுக்கவும், அமைப்பை விட்டு விலகியோட முயற்சிக்கும் உறுப்பினர்களைத் தடுக்கவுமே அவர்கள் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு அந்தத் தன்னார்வ அமைப்புகள் தெரிவித்தன.
(riz)