இணையத்தளத்திற்கான வரி அதிகரிப்பு குறித்து ரவி வெளியிட்ட புதிய தகவல்..

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் இணையத்தளத்திற்கான வரி அதிகரிப்பதற்கான காரணம் வழமையான தொலைபேசி அழைப்புக்களிற்கு புறம்பாக இணையத்தளத்தினூடாக மக்கள் தொடர்புகளை மேற்கொண்டமையே என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதும் அது மிகவும் அதிகமானது இல்லை எனவும் நேற்று(24) நிதியமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

“எம்மோடு நடத்திய பேச்சுவார்த்தையின்போது தொலைபேசி நிறுவனங்கள் வழமையான தொலைபேசி அழைப்புக்களிற்கு பதிலாக அனேகமானோர் வைபர் மற்றும் வட்ஸ் அப் பாவிப்பதாவும் இதனால் தமது வருமானம் குறைவடைவதாகவும் தெரிவித்தனர். இம்மாற்றத்தின் காரணமாக ஏனைய நாடுகளில் உள்ளதைப் போன்று சம மட்டத்திற்கு கொண்டு வருவதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என சுட்டிக்காட்டிய அமைச்சர் அரசாங்கத்திற்கு வருமானத்தை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

புதிய வரி அதிகரிப்பிற்கு அமைவாக ஒவ்வொரு நூறு ரூபா தரவு(DATA) பாவனைக்கும் 50 ரூபாவை வரியாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் அமைச்சரிடம் வினவினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், இதற்கு முன்னர் இதனை ஒத்த தொகை வரியாக அறவிடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார் எனபதும் சுட்டிக்காட்டத்தக்கது.