இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்படும் வர்த்தகம் தொடர்பான செயலமர்வை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஒழுங்கு செய்துள்ளது.
குறித்த இந்த செயலமர்வு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.
இலங்கையின் சமகால இணைய வர்த்தக செயற்பாடுகள் பற்றி இதன்போது விளக்கம் அளிக்கப்படும் என்று ஏற்றுமதி அபிவிருத்தி சபை மேலும் அறிவித்துள்ளது.
(rizmira)