இதய சத்திர சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் ஸ்டென்ட்டின் விலையை பாரியளவில் குறைக்க அரசு தீர்மானித்துள்ளது.
நேற்று(04) இரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பிற்கு அமைய குறித்த இந்த விலை குறைப்பு அமுலுக்கு வந்துள்ளது.
இதயச சத்திர சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் உலோக ஸ்டென்ட்டின் விலை, 75,000 ரூபாயில் இருந்து 24,000 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், மருந்துகளுடன் வெளியிடப்படும் ஸ்டென்ட்டின் விலை, 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.