இதுவரை 1675 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை போன்ற சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, கடந்த அக்டோபர் 30ம் திகதி முதல் இதுவரை 1675 பேர் இந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.