இதுவரை 7437 வாகன சாரதிகள் கைது

(FASTNEWS|COLOMBO) -நேற்று(05) காலை 06 மணி முதல் இன்று(06) காலை 06 மணி வரையான கடந்த 24 மணித்தியாலத்தில் 119 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பமான தினத்தில் இருந்து இதுவரை 7437 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.