இது கால வரலாற்றில் மிக மோசமான கூட்டணி மஹிந்த –மைத்ரி கூட்டணி – ஜே.வி.பி

இது கால வரலாற்றின் மிக மோசமான கூட்டணி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூட்டணியாகும் என ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மைத்திரி – மஹிந்த கூட்டணியை ஏற்றுக்கொள்ள முடியாது. இக்கூட்டணிக்கு எதிராக போட்டியிடும் தரப்பு அதிகாரத்திற்காக எதனையும் செய்யக் கூடிய தரப்பாகும்.

மக்களின் குரலாக ஒலிக்கக் கூடியவர்களை நாடாளுமன்றிற்கு தெரிய வேண்டியது வாக்காளர்களின் கடமையாகும்.

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பி தூய்மையான ஓர் பிரதிநிதிகள் குழுவினை போட்டியிடச் செய்யவுள்ளது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், ஜே.வி.பி வேட்பு மனுக்களில் கையொப்பமிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

(riz)