எந்த உணவுப் பொருளை பார்த்தாலும் இதனை சாப்பிடலாமா வேண்டாமா என்று யோசிக்கத் தோன்றுகிறது.அதோடு சில உணவுகள் காரணங்களே இன்றி அல்லது தவறான புரிதல்களோடு ஒதுக்கி வைத்துக் கொண்டேயிருக்கிறோம்.
சில உணவுப்பொருட்கள் எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் தெரியுமா? அவை என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள் .
காலிஃப்ளவர் :
குறைவான கலோரிகள் கொண்ட காலிஃப்ளவர், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. ஒரு கப் காலிஃப்ளவரில் 28-52 அளவு கலோரிகளே உள்ளது என்பதால், இதை உட்கொள்வதால் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்வதில்லை. மேலும் உடல் எடையையும் குறைத்துக் கொள்ள முடியும்.
பீட்ரூட் :
பீட்ரூட்டில் நிறைய உணவுச் சத்துகள் உண்டு. விட்டமின் சி, பொட்டாசியம்,ஃபோலாசின், பீட்டா கரோட்டின், மாவுச்சத்து, இரும்புச் சத்து இதில் அதிகம் உள்ளன.
பீட்ரூட்டில் இருக்கும் முக்கியமான தன்மை இதில் கொழுப்புச் சத்து கிடையாது. மேலும் பீட்ரூட் நமது உடலின் ஆக்ஸிஜன் உறிஞ்சும் சக்தியை அதிகரிக்கிறது.
பூசணிக்காய் :
பூசணிக்காயின் விதைகளில் விட்டமின் பி, விட்டமின் ஏ, மினரல்ஸ், கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், ஸிங்க், பிடோசின்ஸ், லினோனெலிக் அமிலம் ஆகியன அடங்கியுள்ளன. இதில் கலோரி மிகவும் குறைவாக இருப்பதால் உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக சாப்பிடலாம். மேலும் பூசணிக்காய் உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றக்கூடியது.
பாப்கார்ன் :
சோளத்தால் தயாரிக்கப்படுவது பாப்கார்ன். சோளத்தில் பி காப்ளெக்ஸ் விட்டமின்கள், விட்டமின் ஈ ஆகியவை நிறைவாக உள்ளன.
மலச்சிக்கலைத் தவிர்க்கும். பாப்கார்னில் இருக்கும் நார்ச்சத்து இரத்தத்தில் சேரும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவும். இது பசியைத் தூண்டும் ஹார்மோனைக் கட்டுப்படுத்தி, பசியுணர்வைக் குறைக்கும். எனவே, உடல் எடையைக் குறைக்கவிரும்புபவர்கள் இதைச் சாப்பிட்டால், அதிக உணவு சாப்பிடவேண்டிய அவசியம் ஏற்படாது.
முட்டையின் வெள்ளைக்கரு :
ஒரு சாதாரண கோழி முட்டையில் 80 கலோரிச் சத்து இருக்கிறது. முட்டையை எவ்வாறு சமைத்து சாப்பிட்டாலும் இந்த கலோரிச்சத்துகள் குறைவதில்லை.
உடல் பருமன் அதிகமாக கொண்டவர்கள் மற்றும் முதியவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டுமே சாப்பிடுவது நல்லது. தினமும் 300 மில்லிகிராம் கொழுப்புச்சத்து ஒருவருக்கு தேவைப்படுகிறது.
ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டுமே 275 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது. அதனால் அதனை தவிர்ப்பது வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட வேண்டும்.
முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி விட்டு, வெள்ளை கருவை மட்டும் உட்கொண்டால், புரதச்சத்தை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி, உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.