(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் 919 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இறப்பு எண்ணிக்கை 9,134 ஆக அதிகரித்துள்ளதுடன், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,909 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 574,834 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 26,368 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, தொற்றுக்குள்ளானவர்களில் 129,965 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.